tamilnadu

img

பாவ பரிகார பூஜை நடத்தும் தெலுங்கானா போலீஸ் அதிகாரி... ஹைதராபாத் என்கவுண்ட்டர் சம்பவம்

ஹைதராபாத்:
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி (27), கடந்தநவம்பர் 27-ஆம் தேதி மிகக் கொடூரமானமுறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், முகமது ஆரீப், நவீன், சிவா, சென்ன கேசவலு ஆகிய நான்கு இளைஞர்களைக் கைதுசெய்த ஹைதராபாத் போலீசார், அவர்களை டிசம்பர் 6-ஆம் தேதி என் கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.பிரியங்கா ரெட்டிக்கு நேர்ந்த கொடூரம் ஏற்கவே முடியாதது என்றாலும், குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுவதற்கு முன்பாகவே 4 பேர்கொல்லப்பட்டது கண்டனத்திற்கு உள்ளானது.உச்ச நீதிமன்றம் இந்த என்கவுன்டர் குறித்து விசாரணை ஆணையம் அமைத்தது. கொல்லப்பட்ட நான்கு பேரின்உடல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெலுங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 4 பேரின் உடல்களும்ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.  

இந்நிலையில், என்கவுண்ட்டருக்கு காரணமானவர் என்று கூறப்படும், சைபராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார், தான் முன்னின்று நடத்திய என்கவுண்ட்டர்களுக்காக கோயில் கோயிலாகச் சென்று, பாவ பரிகார சிறப்பு பூஜைகளை செய்து வருவதாக ‘டெக்கான் கிரானிக்கிள்’ ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த வாரம் அனந்தபூர் மாவட்டம் லெபாச்ஷி என்ற பகுதியில் இருக்கும் தனது குலதெய்வமான வீரபத்திரசாமி கோயிலுக்குச் சென்ற சஜ்ஜனார், அடுத்ததாக ஸ்ரீசைலம் கோயிலுக்கும் சென்று பரிகார பூஜை நடத்தியதாக அந்த ஏடு கூறியுள்ளது.

;