tamilnadu

img

மதம், மொழி எதுவாக இருந்தாலும் இந்தியாவில் அனைவரும் இந்துதான்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

ஹைதராபாத்:
இந்தியாவில் இருக்கும் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்’ (ஆர்எஸ்எஸ்) அமைப்புகருதுவதாக, அதன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலம் இப் ராகிம்பட்டினத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டு நாள் ‘விஜய சங்கல்ப சிபிரம்’ நிகழ்ச்சிநடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசுகையில்தான் மோகன் பகவத் இவ்வாறு கூறியுள்ளார். “இந்தியா பாரம்பரியமாகவே ‘இந்துத்துவா’ நாடுதான்; அதனடிப்படையில் நாட்டின் 130 கோடி மக்களையும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் ‘இந்து சமூகம்’ என்றே ஆர்எஸ்எஸ் கருதுகிறது” என்றுகூறியுள்ள மோகன் பகவத், “ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒருவரை, ‘இந்து’ என்று அழைக்கும் போது, இந்தியாவை தங்கள்தாய்நாடாக கருதி அதை நேசிப்பவர்கள் என்றே அர்த்தம்” என்றும்குறிப்பிட்டுள்ளார்.

“பாரதத் தாய் இந்தியாவின் மகன்-மகள் எந்த மொழியைப் பேசுகிறார், எந்த மதத்தை பின்பற்றுகிறார், எந்த விதமான வழிபாட்டைப் பின்பற்றுகிறார் எனபார்ப்பது இல்லை. எவ்வாறாயினும் அவர் ஒரு இந்து என்று மட்டுமே பார்க்கிறாள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.“இந்த உலகம் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றுக்காக இந்தியாவை உற்று நோக்குகிறது. இதை இந்து சமூகம் மட்டுமே வழங்க முடியும்” என்று கூறியுள்ள மோகன் பகவத், ‘போராட்டத்தின் மத்தியில், சமூகம் ஒன்றாக வாழ ஒரு தீர்வைக் கொண்டுவரும். அந்த தீர்வு நிச்சயமாக ஒருஇந்து ‘உபாய்’ (தீர்வு)-ஆக இருக்கும்’ என்று ரவீந்திரநாத் தாகூரே கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.“பன்முகத்தன்மையில் ஒற்றுமை இருக்கிறது என்று ஒருபிரபலமான பழமொழி உள்ளது.ஆனால் நம் நாடு ஒரு படி மேலே செல்கிறது. இங்கே நமக்கு பன்முகத்தன்மையில் ஒற்றுமை மட்டுமல்ல, ஒற்றுமையின் பன் முகத்தன்மையும் உள்ளது” என்றும் ஒரு ‘தத்துவத்தை’ மோகன்பகவத் அள்ளி வீசியுள்ளார்.

;