tamilnadu

img

குதிரைகளுக்கு உணவாகும் காஷ்மீர் ஆப்பிள்கள்!

ஸ்ரீநகர்:
சட்டப்பிரிவு 370 நீக்கம், ஊரடங்கு தடை உத்தரவுகள் போன்றவற்றால், காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.காஷ்மீர் ஆப்பிள்களை மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் என்று மோடி அரசு கூறியது. காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கும், காஷ்மீர் விவசாயிகளிடமிருந்து ஆப்பிள் கொள்முதலை படோடோபமாக துவக்கி வைத்தார். ஆப்பிள் விவசாயிகளைக் பாதுகாக்கும் திட்டம் என்ற பெயரில் சந்தை தலையீடு திட்டமும் கொண்டுவரப்பட்டது.ஆனால், இந்த திட்டங்களால் காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சந்தைத் தலையீடு திட்டத்தின் கீழ் ஆப்பிள்களை வாங்குவதற்கு அதிகளவில் யாரும் முன்வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், மரங்களிலிருந்து பழுத்து கீழே விழும் ஆப்பிள்களைத் துண்டு துண்டாக நறுக்கி, அவற்றை வெயிலில் உலர்த்தும் வேலையில், காஷ்மீர் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது உலர்ந்த ஆப்பிள்கள், குளிர்காலங்களில் கால்நடைகளுக்காவது உணவாகப் பயன்படும் என்ற அடிப்படையில், அவற்றை வெட்டி நறுக்கி வருகின்றனர்.ஆப்பிள்களைப் பொறுத்தவரை, அவற்றை மரங்களிலேயே பறித்து விட வேண்டும்; தானாகவே பழுத்து கீழே விழுந்து விட்டால், அந்த பழங்களுக்கு சந்தையில் மதிப்பிருக்காது என்றும், நான்கில் ஒரு பங்கு அளவிற்கு விலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையிலேயே ஆப்பிள்களை வாங்குவதற்கு யாரும் இல்லாததால், காஷ்மீர் ஆப்பிள் விவசாயிகள் கடும் நஷ்டத்தை அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

;