சண்டிகர்:
ஹரியானா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விகாஸ் சவுத்ரி, மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள் ளார். விகாஸ் சவுத்ரி, வியாழக்கிழமையன்று காலைஉடற்பயிற்சி நிலையத் திற்கு சென்றுவிட்டு தனதுகாரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக துப் பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளனர்.