ஸ்ரீநகர், ஆக.11- ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தினசரி பத்திரிகை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. “காஷ்மீர் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் அனுராதா பாசின் தாக்கல் செய்துள்ள மனுவில், காஷ்மீரிலும், ஜம்முவில் சில மாவட்டங்களிலும் கடந்த 4-ம் தேதிக்குப் பிறகு தொலைபேசி, செல்லிடப்பேசி இணையதளச் சேவை என அனைத்து விதமான தகவல் தொடர்புகளும் நிறுத்தப்பட்டு விட்டன. மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால், பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை சரிவர செய்ய முடிவில்லை. எனவே, பத்திரிகை யாளர்களும், இதர ஊடகத்தினரும் சுதந்திரமாக பணியாற்றுவதற்கு இடை யூறாக உள்ள அனைத்து கட்டுப்பாடு களையும் உடனடியாக தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்துக்கும் உத்தர விட வேண்டும் என கோரியுள்ளார்.