tamilnadu

img

வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

வேலூர்,டிச.12- 2020 ஜனவரி 8 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்த ஆயத்த மாநாடு அனைத்து மோட்டார் வாகன தொழி லாளர்கள் மற்றும் இரு சக்கர  வாகன பழுது பார்ப்பவர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் வேலூரில் நடை பெற்றது. சிஐடியு கேசவன், ராஜேந்திரன், தொமுச வி.ஏ. சலாம், ஏஐடியுசி லோகேஷ் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மத்திய மோடி  தலைமையிலான பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு சாதகமாக மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை செய்துள்ளது. இதனால் மோட்டார் வாகனத் தொழி லில் உள்ள ஏழு கோடி தொழி லாளர்களின் வேலையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மோட்டார் வாகன  சட்டத் திருத்தத்தை திரும்பப்  பெற வேண்டும். மோட்டார் வாகன தொழி லாளர்கள் உள்ளிட்ட முறை சாரா தொழிலாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் சமூக  பாதுகாப்பு நிதியும் ஒதுக்கீடு  செய்து 60 வயது கடந்த  அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் மாதம் ரூ. 6000 வழங்க வேண்டும். வாரிய பதிவு மற்றும்  புதுப்பித்தல் மனுக்கள் கொடுப்பதற்கு தொழிலாளர் கள் அனைத்திற்கும் நேரில் வரவேண்டும் என்பதையும் கைவிட வேண்டும் என வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை விளக்கி டிசம்பர் 15 முதல் 25 வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி பிரச்சாரம் செய்வது, டிசம்பர் 27 அன்று வேலூர்,  திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. சிஐடியு நிர்வாகிகள் எம்.பி. ராமச்சந்திரன், எஸ். பரசுராமன் என்.காசிநாதன்,  தொமுச கே.ஆர்.சுப்பிர மணி, பி.பன்னீர்செல்வம், கணேசன் ஏஐடியுசி சந்திர சேகர், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்  சங்க மாவட்ட நிர்வாகி கோவிந்தசாமி, உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;