tamilnadu

அரக்கோணம் அருகே கீழ்விஷாரத்தில் துப்பாக்கி சூடு

வேலூர் ஏப். 18- அரக்கோணம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட, அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, மற்றும் திருத்தணி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குபதிவு நடைபெற்றது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். திருப்பத்தூர் அண்ணா துவக்க பள்ளியில் வாக்கு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு சுமார் 45 நிமிடம் காலதாமதம் ஏற்பட்டது. திமுக பொருளாளரும், காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் தன் குடும்பத்துடன் காட்பாடி தனியார் பள்ளியில் வந்து வாக்களித்தார். ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்ஆர்.காந்தி நவல்பூர் கங்காதர மேனிலைப்பள்ளில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார், அதே போன்று ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ஆற்காடு தோப்புகானா அரசு பள்ளியில் வாக்களித்தார்.அரக்கோணம் அரிகலபாடுயில் வாக்களிக்க வரிசையில் நின்றுந்த பொதுமக்களிடம் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்,இதை கண்டித்து திமுக வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 3 மணிக்கு கூட்டம் அதிகரித்தது. ஆண்களும்,பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு நேரம் முடியும் தருணத்தில் மேலும் கூட்டம் அதிகமானதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து, அந்த பகுதிக்கு வந்த திமுக, பாமக வேட்பாளர்கள் இருவரும், காத்திருக்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.சோளிங்கர் சட்ட மன்ற இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்கு பதிவானது. காலை முதல் ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் வாக்களித்தனர்.கிராம்புறங்களில் வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஒரு சில இடங்களில் பாமக வினர் வன் முறையில் ஈடுபட்டனர் இதனால் திமுக வினருக்கும். பாமக வினருக்கும் கைகலப்பு ஏற்பட் டது. காவல் துறையினர் சமரசம் செய்தனர்.

;