tamilnadu

img

அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூட உத்தரவு

எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்

சென்னை,பிப்.28- சட்டவிரோதமாக இயங்கும்  குடிநீர் ஆலை களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ள நிலையில், குடி நீர் எடுக்க அரசு அனுமதி யளிக்கக் கோரி, குடிநீர்  உற்பத்தியாளர் சங்கத்தி னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இயங்கி வரும் அனுமதியற்ற குடிநீர் ஆலைகள் தொடர்பான வழக்கில் உரிமம் பெறாத  132 ஆலைகளை மூட நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக அரசு சார்பில் நீதி மன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.

எனினும் சட்டவிரோத குடிநீர் ஆலைகளை மூட ஏற்  கெனவே பிறப்பித்த உத்த ரவை நிறைவேற்றி மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் இல்லை என்றால், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜ ராக உத்தரவிட நேரிடும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, கடலூர் அருகே, அனுமதி பெறா மல் இயங்கிய 13 குடிநீர்  சுத்திகரிப்பு நிலையங்க ளுக்கு அதிகாரிகள் சீல்  வைத்தனர். சென்னை குன்றத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உரிய கட்டிட அனுமதி இல்லாமல் இயங்கி வந்த 4 குடிநீர் ஆலைகளும் சீல் வைக்கப்பட்டன.  இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம்  முழுவதும் குடிநீர் உற்பத்தி யாளர் சங்கத்தினர் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

;