வேலூர், ஜூலை 9- வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றி யம் அக்ராவரம் ஊராட்சி ரேணுகாபுரம் கிரா மத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட தலித் அருந்த தியின மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் அரசால் வழங் கப்பட்ட சர்வே எண் 133/2 நத்தம் புறம்போக்கு பகுதியை சுடுகாட்டிற்கு செல்லும் பொதுப் பாதையாக பயன்படுத்தி வந்தனர். இதையொட்டி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள வீட்டு மனை களுக்கு குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் மூலம் சாலை அமைக்கும் பணியும் துவங்கப்பட்டுள்ளது. மேற்படி சாலை சுடுகாட்டை ஒட்டியுள்ளது. இந்நிலையில் சுடு காட்டுக்கு செல்லும் பொதுப்பாதையை சாதி ஆதிக்க சக்திகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தலித் அருந்ததியின மக்கள் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதையடுத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேலூர் மாவட்டச் செய லாளர் வி.குபேந்திரன், அந்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி வருவாய் துறை மூலம் அளந்து தலித் மக்களின் சுடு காட்டு பாதைக்கு சாலை அமைத்து தரக் கோரி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சி யரிடம் மனு அளித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ப.சக்தி வேல், கே.சாமிநாதன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.காத்தவராயன், விவ சாயிகள் சங்க தாலுக்கா செயலாளர் பிகுண சேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.