tamilnadu

img

ஜன. 8 வேலை நிறுத்தம்: 15 லட்சம் பேர் பங்கேற்க முடிவு

சென்னை, ஜன. 2- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 56 ஜெ  விதியின்படி ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்பக் கூடாது, 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றக் கூடாது உள்ளிட்ட 11  அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தியும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள்  விரோதப் போக்கைக் கண்டித்தும் ஜனவரி 8 ஆம் தேதி  அகில இந்திய வேலை நிறுத்தம்  நடைபெறவுள்ளது. அதையொட்டி மத்திய அரசு  ஊழியர்கள், மாநில அரசு ஊழி யர்கள், வருமான வரித்துறை, தபால், ரயில்வே ஊழியர்கள், அணுமின் நிலைய ஊழி யர்கள் பங்கேற்ற சிறப்பு  மாநாடு சென்னை நுங்கம்பாக் கத்திலுள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் வியாழ னன்று (டிச. 2) நடைபெற்றது. இம் மாநாட்டிற்கு வருமான வரித் துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மீராபாய் தலைமை தாங்கினார். மத்திய அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் வெங்கடே சன் வரவேற்றார்.

மத்திய அரசு ஊழியர் மகா  சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.துரை பாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி என்.வினோத்குமார், மத்திய அரசு அதிகாரிகள் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வருமான வரித் துறை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சிதம்பரம், தபால் ஊழி யர் சம்மேளன மாநிலச் செயலா ளர் வீரமணி, கல்பாக்கம் அணு மின் ஆற்றல் ஊழியர் சங்கத்தின் தலைவர் தனஞ்செழி யன் உள்ளிட்டோர் வேலை நிறுத்தத்தின் அவசியம் குறித்துப் பேசினர். தபால் ஊழி யர் சம்மேளன ஒருங்கிணைப்பா ளர் ஆர்.பி.சுரேஷ் நன்றி கூறி னார். கல்பாக்கம் அணுமின் நிலை யம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு  ஆராய்ச்சி மையம், பாவினி தொழிற்சங்க ஊழியர்கள், பொதுப்பணித் துறை ஊழியர் கள்,  கூட்டுறவு பண்டக சாலை  ஊழியர்கள், ஒப்பந்த தொழிலா ளர்கள் என 5,400 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ள னர். 

தபால் துறையில் நாடு முழுவ தும் 5.5 லட்சம் ஊழியர்களும், வருமான வரித் துறையில் நாடு  முழுவதும் 37 ஆயிரம் ஊழியர்க ளும், 15 ஆயிரம் அதிகாரிகளும்,  மாநில அரசு ஊழியர்கள் 2 லட்சம்  பேர், பிற துறை ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என மொத்தம் 15 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். மேலும் ரயில்வே துறையில் பணிபுரியும் 13 லட்சம்  ஊழியர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தை யொட்டி ஆயத்த மாநாடுகள், வாயிற்கூட்டம், ஊழியர் கூட்டம் என நடத்திக் கொண்டி ருக்கிறோம். வேலை நிறுத்தத்  தின் அவசியம் குறித்து துண்டு  பிரசுரம் விநியோகித்துள்ளோம். கடந்த முறை நடைபெற்ற 18ஆவது அகில இந்திய வேலை நிறுத்தத்தில் 20 கோடி பேர் பங்கேற்றதாகவும், தற்போது நடைபெறும் 19ஆவது வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள், பாதுகாப்புத் துறை, தனியார் நிறுவன ஊழி யர்கள், ஒப்பந்தத் தொழிலா ளர்கள் என 25 கோடி பேருக்கு மேல் பங்கேற்பார்கள் என்றும் துரைபாண்டியன் கூறினார்.

;