tamilnadu

img

ஆற்காடு, திமிரி ஒன்றியத்தில் ஜெகத்ரட்சகன் பிரச்சாரம்

வேலூர், ஏப். 11-அரக்கோணம் மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆற்காடு கிழக்கு ஒன்றியம், திமிரி கிழக்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் முப்பது வெட்டி, கூராம்பாடி, மாங்காடு, களர்,கலவை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரித்தார்.வேட்பாளருடன் ஆற்காடு எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன், திமுக இளஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ரகுபதி, களர் மதி ஆற்காடு ஒன்றியச் செயலாளர் பாண்டுரங்கன், திமிரி ஒன்றிய செயலாளர் அசோகன், காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சிபிஎம் பிரச்சாரம்அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து, சிபிஎம் ஆற்காடு இடைக்குழு சார்பில் பிரச்சாரம் நடந்தது. தொகுதி சிபிஎம் பொறுப்பாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான ஆர்.ரகுபதி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் டி.சந்திரன், தாலுகா செயலாளர் செல்வம், எம்.குமார், செல்லகுமார் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.திமிரி ஒன்றியம், கலவை பேரூராட்சி, திமிரி பேரூராட்சி, மாம்பாக்கம், விளாப்பாக்கம் பேரூராட்சி, ஆணைமல்லூர்,ஆற்காடு நகரம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் நடந்தது. 

;