விஐடியில் சர்வதேச தரத்திலான குளிரூட்டப்பட்ட 10,500 சதுர அடி பரப்பிலான அதிநவீன உடற்பயிற்சி கூடம் மற்றும் 3250 சதுர அடி பரப்பிலான இசை மற்றும் நடன கூடத்தை விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் திறந்து வைத்தார். விஐடி துணைத் தலைவர் முனைவர். சேகர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் முனைவர்.சந்தியா பெண்ட்டரெட்டி, இணை துணை வேந்தர். முனைவர்.எஸ்.நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.