வேலூர் :
அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் எஸ்.சந்தானராமன் காலமானார். அவருக்கு வயது 80.தோழர்.சந்தான ராமனின் உடலுக்கு அகில இந்திய பொதுச் செயலாளர் கே.ராகவேந்திரன், சிபிஎம்மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, தமிழ் மாநிலத் தலைவர் எம்.கன்னையன், சென்னை மாவட்டச் செயலாளர்எஸ்.மீனாட்சி சுந்தரம், மாநில துணை பொருளாளர் சேகர், மாவட்ட துணைத் தலைவர் ஜி.நரசிம்மன், மாநிலச் செயலாளர் ஏ. கதிர் அகமது, மாவட்ட துணை செயலாளர் சி.செஞ்சிமணி, மாநிலப் பொருளாளர் குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.காசிநாதன், எம்.பி.ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.சாவித்திரி, ஏ.குப்பு, மாநில செயலாளர், மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் ஏ.பெருமாள், உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.தோழர். சந்தான ராமன் உடல் காட்பாடி திருநகரிலுள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. வெள்ளியன்று(அக்.18) காலை 8 மணிக்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. பின்னர் 10மணிக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடல் தானமாக அளிக்கப்பட்டது.இரங்கல் கூட்டத்திற்கு ஜி.நரசிம்மன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி, எம்.ஏழுமலை, ஆர்.சாவித்திரி, கதிர் அகமது,ஜோதி சுதந்திர தாதன், சி.ஞானசேகரன், ஏ.பெருமாள், எஸ்.டி.சங்கரி, பேரா.இளங்கோ, கே.ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் உரையாற்றினர்.