tamilnadu

img

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் சிறுவன்

வேலூர்:
வேலூரில் ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, கொள்ளையடிக்க முயன்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, கொள்ளையடிக்க முயன்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே ஒரு தனியார் வங்கி உள்ளது. அதையொட்டி ஏ.டி.எம். மையமும் அமைந்துள்ளது. ஆற்காடு சாலையில் சி.எம்.சி. மருத்துவமனை மற்றும் மருத்துவமனை நர்சுகள், டாக்டர்கள் குடியிருப்பு வளாகங் கள் ஆகியவை அமைந்துள்ளதால் இரவில்வாகனப் போக்குவரத்தால் பரபரப்பாகக் காணப்படும். வேலூர் வடக்குப் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் ஆற்காடு சாலை வழியாக மோட்டார்சைக் கிள்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏ.டி.எம். மையத்தின் உள்ளே ஒருவர் அமர்ந்து இருப்பது தெரிய வந்தது. அவரை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தின் கதவை திறந்து பார்த்தனர்.

அதில் ஒரு சிறுவன், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து, பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அவனை, போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அந்தச் சிறுவனிடம் விசாரணை நடத்தினார். அவன், சைதாப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது. அவன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவன் கைது செய்யப்பட்டான்.மேலும் அவன் கூறுகையில், தன்னுடன் அதேபகுதியைச் சேர்ந்த முனியப்பனின் மகன் ஆனந்தன் என்கிற பைக் ஆனந்தன் (வயது 24), பாலாஜியின் மகன் தினேஷ்குமார் (23) ஆகியோர் வந்தனர், தான் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது, இருவரும் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு மரத்தின் கீழே நின்று கொண்டு அந்த வழியாக யாரேனும் வருகிறார்களா? என நோட்டமிட்டு தனக்கு தகவல் கூறினர். அந்த நேரத்தில் போலீசார் வந்ததைப் பார்த்ததும் இருவரும் தப்பியோடி விட்டதாக, தெரிவித்தான்.இதையடுத்து சிறுவன் கூறிய தகவலின்பேரில் தப்பியோடிய ஆனந்தன், தினேஷ்குமார் ஆகியோரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த 3 பேரும் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என விசாரித்து வருகிறோம், என்றனர்.

;