tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு

சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., குற்றச்சாட்டு

சேலம், மார்ச் 10- சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் குற்றம்சாட்டி யுள்ளார்.  சேலம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வீடு  இல்லாத மாற்றுத்திறனாளி களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு  வழங்கும் உதவித் தொகைகளை இடை தரகர் இன்றி நேரிடையாக கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர். மாற்றுத்திறனாளிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்து சேலம் நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் காங் கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகை யில், அனைவரையும் ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியரை நேரில் அணுகி உரிய நடவடிக்கை எடுப்படும்.  சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு  ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலத்தில் நடைபெற்று வரு கிறது. இத்திட்ட பணிகளில் மாபெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.  மேலும் மத்திய அரசின் நிதியில் கட்டப் பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் தரக் குறை வாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் இது  குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவ தாகவும், உரிய ஆதாரத்துடன் மத்திய அரசின் கவனத்திற்கு விரைவில் இந்த முறைகேடுகள் குறித்து கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.