tamilnadu

img

வேலூர் கோட்டை ஹிஜாப் விவகாரம் - 7 பேர் கைது

வேலூர் கோட்டைக்கு நண்பர்களுடன் சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை கழற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வேலூர் கோட்டைக்கு தனது நன்பர்களுடன் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்கள் சிலர் சுற்றுலா வந்துள்ளனர். அப்பொழுது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சில நபர்கள் அப்பெண்களிடம் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும், ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி தகராறு செய்துள்ளனர். பிறகு அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்பத்தியது. இவ்விவகாரம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தற்போது 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

;