tamilnadu

img

அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் தேசியமயமாக்கியது ஸ்பெயின் அரசு

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டு அரசு அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களை தேசியமயமாக்கி உள்ளது.

உலகில் உள்ள 130 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்த நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,79,334 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 7,121 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரசால், சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் அதிகபட்சமாக இத்தாலியில் 27,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,158 பேர் பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து, ஸ்பெயினில் 9,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 342 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் ஸ்பெயின் அரசு, அந்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களை தேசியமயமாக்கி உள்ளது. முன்னதாக அந்நாட்டில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்கள், உணவு விடுதிகள், உள்ளிட்டவை மூடப்பட்டன.
 

;