tamilnadu

img

12 மணி நேரத்தில் 4520 சதுரடியில் ஓவியம் - கின்னஸ் சாதனை படைத்த பெண்

ஸ்காட்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர், 12 மணி நேரத்தில் 4520 சதுரடியில் ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் ஜோஹன்னா பாஸ்போர்டு (36 வயது) வனவிலங்குகள் மற்றும் மலர்கள் தொடர்புடைய ஓவியங்களை வண்ண புத்தகங்களில் வரைந்து வருபவர். இளம் வயதில் இருந்தே படம் வரையும் கலையில் ஆர்வம் கொண்ட ஜோஹன்னா, 12 மணி நேரத்திற்குள் 4520 சதுரடியில் பூக்கள் ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

முன்னதாக இந்தியாவை  சேர்ந்த அமன்சிங் குலாட்டி, 4416 சதுர அடியில் மகாத்மா காந்தியின் படத்தை வரைந்து சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் இவரது சாதனையை ஜோஹன்னா தற்போது முறியடித்துள்ளார்.
 

;