tamilnadu

img

வேடசந்தூரில் விவசாயிகள் போராட்டம்....

வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை ஊராட்சி ராஜபுரத்தில் மன்னர் ஆட்சி காலத்தில் எட்டு ஏக்கரில் கருங்கல் குளம் அமைக்கப்பட்டது. குளத்திற்கு அருகே உள்ள தொப்பையசாமி மலைப்பகுதியில் மழை பெய்தால் அங்கிருந்து வெள்ளநீர் ஓடைகளில் வழியாக வந்து கருங்கல் குளம் நிறைந்து அருகேஉள்ள குளங்களுக்கு செல்லும். குளத் தில் தண்ணீர் தேங்கினால் குளத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் நீர் மட்டம் உயரும். ஆழ்துளைக்கிணறின் நீர் மட்டமும் உயரும். 

 கருங்கல் குளத்தில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்த நிலையில்இருந்தது. இதை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் எட்டு வருடங்களாக  அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் குளத்தின் தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு தொப்பையசாமி மலைப்பகுதியில் மழைபெய்தது. அதிகளவு வெள்ளநீர் வந்ததால் குளத்திற்கு மழைநீர் வந்தது. குளத்தின் நடுவே உள்ள தடுப் பணையில்உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாக ஓடை வழியாக வெளியேறியது. இதை அடைக்க அதிகாரிகள்நடவடிக்கையும் எடுக்கவில்லை. உழவர் ஆர்வலர் குழுத் தலைவர் சவடமுத்து, செயலாளர் அழகர்சாமி தலைமையில் அப்பகுதி விவசாயிகள் குளத்திற்கு வந்து வீணாக வெளியேறிச் செல்லும் தண்ணீரில் நின்று மேல்சட்டை அணியாமல் ஆர்ப்பாட்டம் செய்தனர். குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீரை அடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

;