tamilnadu

img

வெங்காயம் விலை குறையும்: தமிழக அரசு தகவல்

சென்னை, செப். 23- அடுத்த மூன்று நாட்களில் தமி ழகத்தில் வெங்காயம் விலை குறை யும் என தமிழக அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. வெங்காயம் அதிகம் விளையும்  மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா,  குஜராத், ராஜஸ்தான், மத்திய பிர தேசம் உள்ளிட்ட  மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. இத னால் உற்பத்தி குறைந்ததால், நாடு  முழுவதும் வெங்காய விலை கடந்த  சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் வரத்து குறைந்துள்ள காரணத் தால், வெங்காயம் கிலோ 70 முதல்  80 ரூபாய் வரை விற்பனை செய்யப்  படுகிறது.

தொடர்ச்சியாக பண்டிகைகள் வரவிருப்பதாலும், பருவ மழை துவங்க இருப்பதாலும் வெங்காய விலை மேலும் உயர வாய்ப்பிருப் பதாகவும் கூறப்படுகிறது. இதனால்  ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்  கப்படக் கூடும் என்பதால், வெங்  காய விலை உயர்வை கட்டுப்ப டுத்துவது குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கூட்டுற வுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  ஆகியோர் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் தலை மைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக அரசே  தனியாரிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து குறைந்த விலையில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக மக்களுக்கு விற்  பனை செய்வது தொடர்பாக ஆலோ சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும், விலை குறைப்பு நடவ டிக்கை தொடர்பாக கூட்டத்தில் எடுக்  கப்பட்ட முடிவுகள் குறித்து விரை வில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

;