விருதுநகர், மே 10- சிஐடியு தலைவர்களில் ஒருவரான தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினத்தை யொட்டி விருதுநகரில் உள்ள அரசுத் தலை மை மருத்துவமனைக்கு தங்களது உதிரத்தை தானமாக டி.ஒய்.எப்.ஐ. ரத்த தான கழகத்தி னர் வழங்கினர். விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசுத் தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு ரத்த வங்கியும் செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இத னால், ரத்த வங்கிக்கு ரத்த தானம் செய்வோ ரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. எனவே, அங்கு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பி ணிப் பெண்கள் மற்றும் அறுவைச் கிசிச்சை செய்யப்படும் நோயாளிகளுக்கு ரத்தம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதை யடுத்து, அரசுத் தலைமை மருத்துவமனை நிர்வாகம், டிஒய்எப்ஐ ரத்த தான கழகத்தி னரிடம் ரத்தம் தேவை உள்ளதாக தெரிவித்த னர்.
இந்நிலையில், தோழர் வி.பி.சிந்தன் நினைவுதினத்தையொட்டி ரத்த தான முகாம் நடத்துவது என வாலிபர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, பழைய அருப்புக்கோட்டை சாலையில் உள்ள அண்ணாமலையம்மாள் மகப்பேறு மருத்துவ மனையில் டி.ஒய்.எப்.ஐ ரத்த தான கழகம் சார்பில் முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட 63 பேர் தங்களது உதிரத்தை தானம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் நகர் தலைவர் தீபக் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். ரத்த தான கழக செய லாளர் எம்.மாரிமுத்து வரவேற்புரையாற்றி னார். துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத் பேசினார். மாவட்டச் செய லாளர் மீ.சிவராமன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், நகர் செயலாளர் எல்.முருகன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முடிவில் நகர பொருளா ளர் ஆனந்த் நன்றி கூறினார்.