tamilnadu

இந்த முறையும் உள்ளாட்சி தேர்தலில் ஏமாற்றம்: உடுமலை மலைவாழ் மக்களுக்கு வாக்குரிமை மறுப்பு

திருப்பூர், டிச. 9 - திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு இந்த முறையும் உள்ளாட்சித் தேர்த லில் வாக்குரிமை மறுக்கப்பட் டுள்ளது. உடுமலைபேட்டை மலைப் பகுதியில் திருமூர்த்தி மலை, மாவ டப்பு, பூச்சிக்கொட்டாம்பாறை, குழிப்பட்டி, கருமுட்டி, தளிஞ்சி, தளிஞ்சிவயல், கரட்டுப்பதி உட் பட 10க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் செட்டில்மெண்டுகள் உள்ளன. இங்கு ஆறாயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொள்ளாச்சி நாடா ளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்த மலை செட்டில்மெண்ட்டில் 1800 வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல், சட்ட மன்றத் தேர்தல்களில் வாக்குரி மையைப் பயன்படுத்தும் இந்த மலை மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் வாக்களிக்கும் உரிமை இல்லை.  ஆரம்பத்தில் இந்த மலை மக் களை அருகாமையில் சமவெளிப் பகுதியில் இருக்கும் ஊராட்சிக ளுடன் இணைத்து வைத்திருந்த னர். அதையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்த நிலையில் இவர்களுக்கு உரிய முறையில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இதன் பிறகு கடந்த சில உள்ளாட் சித் தேர்தல்களுக்கு முன்பாக இவர்களுக்கான உள்ளாட்சி வாக்குரிமை மறுக்கப்பட்டது. அப்போதிருந்தே வாக்குரிமைக் காக இந்த மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து இந்த மலைவாழ் மக்கள் சார்பாக தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் தொடர்ச் சியாக மாவட்ட ஆட்சியர், தேர் தல் ஆணையம் உள்ளிட்டோ ருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். எனினும் அவர்களுக்கு இதுவரை உள்ளாட்சித் தேர்தல் வாக்குரிமை கிடைக்கவில்லை. தற்போதுள்ள மலை செட்டில் மெண்டுகள் நில அமைப்பு, மக்கள் தொகை அளவு ஆகியவற்றைக் கொண்டு இந்த மலை கிராம மக்க ளுக்கு மூன்று ஊராட்சி அமைப்பு களை ஏற்படுத்தலாம். ஆனால் அதிகாரிகள் இதைப் பற்றி கிஞ் சித்தும் அக்கறை இல்லாதவர் களாக இருக்கின்றனர். தேர்தல் வார்டு மறுவரை தொடர்பாக அண்மையில் மாநில அளவிலான உயர் அதிகாரிகள் திருப்பூருக்கு வந்திருந்தபோதும் இதுபோல் மனு அளிக்கப்பட்டது. அதுவும் கிணற்றில் போட்ட கல் லாகப் போய்விட்டது.  உள்ளாட்சித் தேர்தல் அறி விக்கை செய்யப்பட்டு விட்ட நிலையில் உள்ளாட்சி அமைப்பு கள், வார்டுகள் மறுவரை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்களை அரசு நிர்வாகம் முன்கூட்டியே வெளிப்படையாக அறிவிக்காமல் மூடு மந்திரமாக வைத்திருந்தனர். இப்போதுதான் அந்த பட்டிய லும் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு களுக்கு உரிய அலுவலகங்களில் நோட்டீஸாக ஒட்டி வைக்கப் பட்டுள்ளது.

இதிலும் மலை செட்டில் மென்டுகளுக்கு வாக்குரிமையும் இல்லை, தனி கிராம ஊராட்சி அமைப்புகளும் இல்லை.  இது தவிர திருப்பூர் மாவட்டம் முழுமைக்கும் சேர்ந்து உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரே யொரு வார்டு மட்டுமே பழங்குடி பெண் இட ஒதுக்கீடு என அறி விக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டப்படி இங் குள்ள மலைமக்களுக்கு உரிய மக்கள் பிரதிநிதித்துவம் கிடைப் பதற்கு இப்போது வரை ஏற்பாடு செய்யாமல் உரிமையைப் பறித்து வருகிறது தமிழக அரசு நிர்வா கம். வாக்குரிமை மட்டுமின்றி, அந்த மக்களுக்கான நிலப் பட்டா, வன உரிமை சட்டப்படி யான உரிமைகளையும் நிறை வேற்றாமல் இரண்டாம் தரக் குடிமக்களாக அரசு நடத்தி வரு கிறது என்று உடுமலை மலைவாழ் மக்கள் புறக்கணிப்பின் வேதனை யுடன் குமுறலை வெளிப்படுத் துகின்றனர்.

;