tamilnadu

img

கல்லூரிகளுக்கிடையிலான நீச்சல் போட்டி மதுரை அமெரிக்கன், லேடிடோக் கல்லூரிகள் சாம்பியன் பட்டம் வென்றன

திருவில்லிபுத்தூர், செப்.23- திருவில்லிபுத்தூர் கலச லிங்கம் பல்கலையில் மதுரை காமராஜர் பல்கலை., உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிலான நீச்சல் போட்டி கள் நடைபெற்றன போட்டியை கலசலிங் கம் கலைக் கல்லூரி முதல்வர் சந்திரா துவக்கி வைத்தார். மதுரை காமராஜர் பல்க லைக்கழக உடற்கல்வி இயக்குநர் ஜெகவீரபாண்டி யன் முன்னிலை வகித்தார். ஆண்கள் பிரிவில் பத்து கல்லூரிகளிலிருந்து 70 மாண வர்களும் பெண்கள் பிரிவில் எட்டு கல்லூரிகளிலிருந்து 45 மாணவிகளும் பங்கேற்றனர் ஆண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும், இரண்டாமிடத்தை சிவகாசி அய்யநாடார் ஜான கியம்மாள் கல்லூரி அணி யும் பெற்றது. பெண்கள் பிரி வில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மதுரை லேடி டோக் கல்லூரி அணியும் இரண்டாமிடத்தை மதுரை யாதவர் கல்லூரி அணியும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு சான்றி தழ்கள், கேடயங்களை கல் லூரி முதல்வர் சந்திரா  வழங்கினார். கலசலிங்கம் பல்கலை. உடற்கல்வி இயக்குநர்கள் உதய குமார், செல்வரசன், செல்வ கனேசன் செல்வகுமார், சித்ரா ஆகியோர் போட்டி களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.