விருதுநகர், ஆக.3- விருதுநகரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இ.ஐ.ஏ திருத்தச் சட்டம் -2020 ஐ திரும்ப பெறக் கோரி திங்களன்று ஆதித் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலை வர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உட னடியாக சட்டமாக இயற்ற வேண்டும். இ.ஐ.ஏ சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர். மேற்கண்ட கோரிக்கையை வலி யுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.