tamilnadu

img

சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்வதாக ரூ.30 கோடி மோசடி

குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

கோவை, நவ.11– வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக ரூ.30 கோடி வரை மோசடி செய்த நபரை கைது செய்யக்கோரி திங்க ளன்று பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  கோவை நியூ சித்தாபுதூர் பகுதியில் தன்வர்ஷா டூர் அன்ட் டிராவல்ஸ் நிறுவ னம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமை யாளர்கள் சுரேஷ், உமாமகேஷ்வரி மற்றும் இவர்களது மகன் சபரி ஆகியோர் நிர்வ கித்து வருகின்றனர். இந்நிலையில், இந் நிறுவனத்தின் சார்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலா தளங்க ளுக்கு அழைத்து செல்வதற்கு கட்டணம் நிர்ணயம் செய்து விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது. இதனை நம்பி சிறு சிறு குழுக் களாக சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் பணத்தை செலுத்தியுள்ளனர். சுமார் ரூ.30 கோடி அளவிற்கு பணத்தை வசூலித்த இந்நிறுவன உரிமையாளர்கள் கடந்த 40 நாட்களுக்கு முன்பு தலைமறைவாகினர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகா ரையடுத்து சுரேஷ் மற்றும் உமாமகேஷ்வரி ஆகியோரை மட்டும் கைது செய்துள்ளனர். அதேநேரம், பணம் வசூலித்த முக்கிய குற்ற வாளியான சபரியை மட்டும் இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சபரியை கைது செய்து எங்களின் பணத்தை  மீட்டுக்கொடுக்க வேண்டும் என வலியு றுத்தி பாதிக்கப்பட்டவர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இவர்களுடன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞா னம், கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர் ஆகியோர்  உடன் வந்திருந்தனர்.

;