tamilnadu

img

பொதுத்துறை வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்பு: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தருமபுரி, அக்.22- மத்திய பாஜக அரசு, பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தருமபுரி, நாமக்கல் மாவட்டத்தில் வங்கி பணிகள் முடங்கியது. மத்திய அரசு 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கி களாக குறைக்கும் நடவடிக்கையை கண்டித்தும், பொதுத்துறை வங்கி களை சீர்திருத்தம் என்ற பெயரில் சீர்குலைக்கதே. பெருமுதலாளிகள் தரவேண்டிய வராக்கடனை வசூலிக்க வேண்டும். பொது மக்களிடம் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணத்தை குறைக்க வேண்டும். வைப்புநிதிக்கு அதிக வட்டி தர வேண்டும். வங்கி வேலை வாய்ப்பை பாதுகாக்க வேண்டும். காலிப்பணியிடங்களை  நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று வங்கி ஊழியர் சங்கங்களான ஏஐபிஇஏ மற்றும் பிஇஎப்ஐ சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலை ஏற்று தருமபுரி மாவட்டம் முழுவதும் வங்கி  ஊழியர்கள் பணிகளை புறக் கணித்து வேலைநிறுத்த போராட் டத்திற்கு பேராதரவு அளித்தனர். இதன்படி தருமபுரி மாவட்டத்தில் 2,500க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் மாவட் டத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான பணப்பரிவர்த்தனை முடங்கியதாக வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.    

நாமக்கல் 

இதேபோல், நாமக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பெரும்பாலான ஊழியர்கள் பணி களை புறக்கணித்து போராட் டத்தில் பங்கேற்றனர். மேலும், நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள  பாங்க் ஆப் பரோடா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப் பாளர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் கூட்ட மைப்பின் தொழிற்சங்கத் தலை வர்கள் உட்பட   வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 

;