விழுப்புரம், ஜூன் 6- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவல ராக (சத்துணவு) பணிபுரிபவர் ஜெய்சங்கர். இவர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க விழுப்பு ரம் மாவட்ட தலைவராகவும் உள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வெள்ளியன்று தனது இருசக்கர வாகனத்தில் ஜெய்சங்கர் சென்றார், அப்போது கஞ்சனூர் காவல் நிலையம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகம், ஜெய்சங்கரை தடுத்து நிறுத்தி முகக்கவசம் சரியாக அணியவில்லை என்று மரியாதைக் குறை வாக பேசியுள்ளார். அதற்கு துணை பிடிஓ ஜெய்சங்கர் தான் அரசு அதிகாரி எனக் கூறியதோடு, காற்றில் சரியாக படியவில்லை என கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அதனை ஏற்காத உதவி ஆய்வாளர் தகாத வார்த்தை களால் திட்டி தாக்கியுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சி யர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் சம்பந்தமாக உரிய நடவ டிக்கை எடுக்கவில்லை எனில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் உதவி ஆய்வாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இச்சம்ப வத்தைக் கண்டித்து மாவட்ட தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரி வித்தனர்.