tamilnadu

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை முகாம்

விழுப்புரம், ஆக. 6- விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்  நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியர் அண்ணா துரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:   மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையை தவறவிட்டி ருந்தாலோ அல்லது சேதமடைந்தி ருந்தாலோ புதியதாக தேசிய அடை யாள அட்டை வழங்க முகாம் அனைத்து வட்டங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை  நடைபெறவுள்ளது.  7ஆம் தேதி வானுார் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள பி.டி.ஓ. அலுவலகத்திலும், 8ஆம் தேதி திரு வெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ. அலு வலகத்திலும், 10ஆம் தேதி பி.டி.ஓ.  அலுவலகத்திலும், 12ஆம் தேதி திண்டிவனம் கூட்டேரிபட்டு பி.டி.ஓ.  அலுவலகத்திலும், 13ஆம் தேதி  விக்கிரவாண்டி பி.டி.ஓ. அலுவல கத்திலும், 14ஆம் தேதி செஞ்சி பி.டி.ஓ.  அலுவலகத்திலும், 17ஆம் தேதி மேல்மலையனுார் பி.டி.ஓ. அலுவல கத்திலும், 18ஆம் தேதி விழுப்புரம்  கோலியனுார் பி.டி.ஓ. அலுவலகத்தி லும் நடைபெறுகிறது. அடையாள அட்டை இல்லா தோர், தவறவிட்டவர் மற்றும் அட்டை சேதமடைந்தவர்கள், கொரோனா நிவாரணம் பெறாதவர்கள் நிவார ணம் பெறவில்லை என கிராம நிர்வாக  அலுவலர் சான்று மற்றும் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடை யாள அட்டை நகல் (இருந்தால்), ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்  காளர் அடையாள அட்டை ஆகிய வற்றின் அசல் மற்றும் நகல்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படும் 4  ஆகியவற்றோடு முகாம் நடைபெறும்  நாளில் குறித்த நேரத்தில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியோடு கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;