tamilnadu

விழுப்புரத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் மக்கள் அச்சம்

விழுப்புரம், ஜூன் 9- விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த திங்கள் கிழமை வரை திண்டிவனம், மரக்காணம் சாலையைச் சோ்ந்த இருவா், செஞ்சி அருகே பொன்னம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த  ஒருவா், விழுப்புரம் அருகே அதனூரைச் சோ்ந்த ஒருவா் என 4 பேருக்கு கொரோனா  தொற்று கண்டறியப்பட்டது. இவா்கள் அனை வரும் சென்னையிலிருந்து திரும்பியவா்கள். இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 380இல் இருந்து 384ஆக உயா்ந்தது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விக்கிரவாண்டி அருகேயுள்ள தெ.புதுப் பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 55 வயது பெண் நீரிழிவு நோய், மூச்சுத் திணறலால் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரையும் சோ்த்து, மாவட்டத்தில் கரோனாவால் உயி ரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயா்ந்தது. கடந்த ஏப்ரல் மாதம் வரை விழுப்புரம் மாவட்டத்தில் தில்லிக்கு சென்று வந்த ஒரு  சிலருக்கு தவிர வேறு யாருக்கும் கொரானா தொற்று இல்லை. அதனால் விழுப்புரம் மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக இருந்தது. இந்நிலையில் மே மாதம் சென்னை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த வர்கள் வருகையையடுத்து கிடுகிடுவென உயர்ந்து திங்கட்கிழமை வரை 384 பேருக்கு  தொற்று ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  ஊர டங்கு தளர்வுகள் வந்த பிறகு மாவட்டத்தில் முன்பு போல் கொரானா தடுப்பு பணியில்  மாவட்ட நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை என  சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

;