tamilnadu

img

புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்குப் பட்டத்தை அர்ப்பணித்த ஹாமில்டன்

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாரி என்ற சிறுவன் அரியவகை எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.தீவிர பார்முலா ஒன் (கார் பந்தயம்) ரசிகரான ஹாரி தீவிர சிகிச்சை பெற்றுவருவதால் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்.ஹாமில்டனின் ரசிகராக உள்ள ஹாரி அவர் பங்கேற்கும் தொடரை இடைவெளியில்லாமல் மீண்டும் மீண்டும் பார்க்கும் வழக்கம் உடையவர். இந்த செய்தி ஹாமில்டன் காதுக்குச் செல்ல தான் வென்ற பார்சிலோனா கோப்பை மற்றும் இரண்டு ரேஸிங் கிளவுஸ்களை (கையுறை) ஹாரிக்கு அனுப்பி வைத்தார்.மேலும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஹாரியின் வீட்டின் வெளியில் தனது ரேஸிங் தயாரிப்பு காரை நிறுத்தி வைத்து துயரமான நாட்களில் ஹாரிக்கு மகிழ்ச்சி சேர்த்துள்ளது.ஹாமில்டன் அளித்துள்ள பட்டத்தையும்,மெர்சிடஸ் நிறுவனம் நிறுத்தியுள்ள காரையும் காண ஹாரி வெகு நாட்களுக்குப் பிறகு வெளியில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.