tamilnadu

img

அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வு செய்த பொது ஆய்வுக் குழுவினர்

விருதுநகர், அக்.20- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், கிராமப்புற மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள் ளதா என  மத்திய பொது ஆய்வுக் குழு வினர் ஆய்வு மேற்கொண்டனர்.  மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் பொது ஆய்வுக் குழு வினர் ஒவ்வொரு ஆண்டும் 2 மாவட்டங்களைத் தேர்வு செய்து, அங்குள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய வற்றை ஆய்வு செய்வர். அங்கு, மத்திய அரசால் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதா? மத்திய, மாநில அரசு கள் இணைந்து நடத்தும் பல்வேறு திட்டங்கள் பற்றி பொது மக்களுக்கு தெரிந்துள்ளதா? மருத்துவமனை களில் அரசால் வழங்கப்பட்டுள்ள இயந் திரங்கள் பயன்பாட்டில் உள்ளதா? நோயாளிகளுக்கு அடிப்படை வசதி கள் செய்து தரப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்வர். பின்பு, அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப் பட்ட  மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம ளிப்பர்.  ஆய்வின் முடிவுகளை அறிக்கை யாக  சுகாதாரத்துறை அமைச்சர் மற் றும் சுகாதாரத்துறை செயலரிடம் சமர்ப்பிப்பது வழக்கம். மேலும், மருத்துவமனைகளை மேம்படுத்து வதற்கான ஆலோசனைகளையும் அதில் இணைத்து வழங்குவார்களாம்.  அந்த வகையில் இந்த ஆண்டு, தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பொது ஆய்வுக் குழுவினர் விருது நகர்  அரசுத் தலைமை மருத்துவ மனை, திருவில்லிபுத்தூர் ஆரம்ப சுகா தார நிலையம், விருதுநகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர். மருத்துவர் ரவிச்சந்திரன் தலைமையில் 8 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள்  அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அதில், ஆவணங்கள் சரி யாக உள்ளதா? உபகரணங்கள் சரி யாக பராமரிக்கப்படுகிறதா? உட் கட்டமைப்பு வசதிகள், நோயாளி களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர்.  முடிவில், திங்களன்று விருது நகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விபரங்களை கூற உள்ளனர். ஆய்வின் அறிக்கையை சுகாதாரத்துறை செயலரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

;