திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் - இராஜபாளையம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சு ஆலையில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவவலறிந்து வந்த இராஜபாளையம், திருவில்லி புத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் இருபது பேர் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமாயின.