குடவாசல், ஆக.21- இந்தியாவை பன்னாட்டு கம்பெனி களுக்கு தாரை வார்க்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து அகில இந்திய விவசாயி கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார் பாக 10-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 20 வரை அனைத்து மாவட்ட, ஒன்றியங்களில் நடை பெறுகிறது. இதையொட்டி குடவாசல் பகுதி யில் வி.பி. சிந்தன் பேருந்து நிலையத்தில் வியாழன் அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி.ஜி.சேகர் தலைமை தாங்கினார். சிபிஐ ஒன்றிய செயலாளர் ஏ.சுப்ரவேல் முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாவட் டத் துணைச் செயலாளர் கே.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.