tamilnadu

img

சீருடைகள் வழங்க சாலைப் பணியாளர்கள் வலியுறுத்தல்

விழுப்புரம், ஜன.23- தமிழ்நாடு சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் கே.கருணா கரன் தலைமை தாங்கினார். அரசுப்பணி யாளர்கள் சங்க முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சி.அருணகிரி, முன்னாள் மாநில  பிரசாரச் செயலாளர் எஸ்.சிவகுரு ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில பிர சாரச் செயலாளர் பி.குமரவேல் சிறப்புரை யாற்றினார். இந்த கூட்டத்தில் மாவட்ட, வட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலை வராக ஆர். அந்தோணி ஜார்ஜ், செயலராக ஜெ.பரந்தாமன், பொருளாளராக ஏ.ராம ராஜன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப் பட்டனர். சங்கத்தின் மாநில மாநாடு குறித்தும், சாலைப்பணியாளர்கள் கோரிக்கை கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஜி. சேகர், ஜி.ரமேஷ், எம்.ஆறுமுகம், முருகன், பரந்தா மன், சசிக்குமார், பழனி, ராமச்சந்திரன், சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.சாலைப்பணியாளர்களுக்கு சீருடை, மழைக் கோட்டு, தளவாடப் பொருள்கள், காலணிகளை ஆண்டுதோறும் அரசு வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு விடுப்பு கால சலுகை அளிக்க வேண்டும்.  41 மாத பணி நீக்க காலத்தை ஓய்வூதி யத்துக்கு பொருந்தக்கூடிய வகையில் கணக்கிட வேண்டும். சாலைப் பராமரிப்பு பணியை அரசே தொடர்ந்து நடத்த வேண்டும்.  நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், மண்டல  அளவில் உள்ள தரக் கட்டுப்பாட்டு அலுவல கங்களில் காலியாக உள்ள ஆய்வக உதவி யாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள சாலைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;