tamilnadu

img

மாற்றுத்திறனாளி தர்ணா

விழுப்புரம், ஜன. 11- விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத் திற்கு உட்பட்ட ப.வில்லிய னூரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தங்கராணி (37). மாற்றுத் திறனாளியான இவர் வெள்ளிக்கிழமையன்று  தனது கணவருடன் ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என கூறினார். இதனைத் தொடர்ந்து அவரை ஆட்சியர் அலுவல கத்திற்கு அழைத்து சென்ற னர். பின்னர் அவர் ஆட்சியரி டம் கோரிக்கை மனு அளித்தார். இது குறித்து தங்கராணி கூறியதாவது:- நான் கணவருடன் ப.வில்லியனூரில் வசித்து வருகிறேன். கடந்த 2013-ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தில் இடுப்பு எலும்பு முறிந்து 60 சதவீதம் ஊனமடைந்து விட்டேன். எனது கணவரும் ஐடிஐ படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறார். 3 பிள்ளைகள் உள்ளனர். 10 ஆம் வகுப்பு படித் துள்ள நான், எங்கள் கிராமத்தின் அரசுப் பள்ளி யில் சமையலர் வேலைக்கு விண்ணப்பித்து, கடந்த 7. 9. 2018 இல் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால், எனக்கு வேலை வழங்கப்பட வில்லை.  கடந்த 24.12.2019-ஆம் தேதி கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து, அதற்கான நேர்முகத்தேர்விலும் பங்கேற்றேன்.  மேலும் மாற்றுத்திறனாளி அடிப்படையில் முன்னுரிமை அளித்து வேலை வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர், முதல்வர், அமைச்சர்  ஆகியோருக்கு மனு அளித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில், தகுதி யானவர்களை தேர்வு செய்யாமல், ரூ.5 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு, தகுதியற்றவர்க ளுக்கு பணி வழங்கும் முயற்சி நடைபெறுகிறது. எனவே மாற்றுத் திறனாளி களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;