திருவில்லிபுத்தூர், மே 18- கொரோனா ஊரடங்கால் திருவில்லி புத்தூரில் ஆதரவற்றவர்களுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அன்ன வாசல் திறக்கப்பட்டு 11 நாட்கள் உணவ ளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சாமு வேல் ராஜ், மகாலட்சுமி மாவட்ட செயலா ளர் அர்ஜூனன் ஆகியோர் பங்கேற்றனர். அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் ஜெயக்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் திருமலை ஒன்றியச் செயலாளர் சசிக்குமார், பகுதி இளைஞர்கள் லிங்கம், சதீஷ்குமார், வினோத்குமார், சங்கர், அருண்குமார், கண்ணன், மாதவன், பாபு, முனீஸ்வரன், பாண்டி. கோபால், சிறுவன் லெனின்ராஜ் ஆகி யோரை மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் பாராட்டினார்.