tamilnadu

img

நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் ஆகாய தாமரை- விவசாயிகள் கவலை

பருவமழையால் நிரம்பும் குளம் குட்டைகள்

மேட்டுப்பாளையம், நவ.15- மேட்டுப்பாளையம், அருகே பருவ மழையால் பல ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பும் குளம், குட்டைகள் மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிக்கும் ஆகாய தாமரைகளால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். கடந்த ஒருமாத காலமாக பெய்து வரும் மழை காரணமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள குளம், குட்டைகள் நீர் நிரம்பி காட்சியளிக்கின்றன. குறிப் பாக பெள்ளாதி என்னும் பகுதியில் உள்ள நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் 20 ஆண்டுகளுக்கு பின்பு தற் போது முழுமையாக நிரம்பியுள்ளது. மழைக்கு முன்பே காய்ந்து கிடந்த நீர்நிலைகளை தூர்வாரியது, ஆக் கிரமிப்புகளில் இருந்து அதன் நீர் வழிப்பாதைகளை மீட்டு எடுக்கப் பட்டது. கடந்த அக்டோபர் மாதத் தில் மட்டும் மேட்டுப்பாளையம் பகுதியில் 529  மில்லி மீட்டர் மழை  பொழிந்தது. இதனால் மேட்டுப் பாளையம், காரமடை மற்றும் சிறு முகை பகுதிகளில் நூற்றுக்கும் மேற் பட்ட குளம், குட்டைகள் மற்றும் தடுப் பணைகளில் மழைநீர் வீணாகாமல் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும், தற்போது இந்த குளம் மற்றும் குட்டைகளை ஆகாயதாமரைகள் ஆக்கிரமிக்க துவங்கியுள்ளதை கண்டு அதிர்ச்சி யடைந்துள்ளனர். மழை பொழிந்து தெளிவான நீருடன் காணப்பட்ட குளம், குட்டைகளில் தீடீரென ஆகாய தாமரைகள் ஒரு சில தினங்களி லேயே நீரின் மேல்வேகமாக பரவி வளர்ந்து வருகிறது. அதிகளவில் நீரை உருஞ்சி மிக வேகமாக வளரக் கூடிய தன்மையுடைய இந்த தாவர பரவலால் தண்ணீர்வீணாக குறைவ தோடு இருக்கும் நீரும் சூரிய ஒளி படாமல் பயன்படுத்த இயலாத அளவிற்கு மாசுப்பட்டு போகும் என வேதனையுடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து வேளாண்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, “நீர்நிலைகளில் கழிவு நீர் கலக்க விடப்படுவதால் தான் ஆகாய தாமரைகள் வளர்கின்றன. உள்ளாட்சி அமைப்புகள் குளம் மற்றும் குட்டைகளில் உள்ளூர் கழிவு நீர் கலப்பதை தடுப்பது அவ சியம், இல்லையெனில் இதனை தற்காலிகமாக அகற்றியும் பய னில்லை மீண்டும் வளரும்” என்றனர்.  சுற்றுப்புற நீர்நிலைகள் நிரம்பி யதால் அடுத்து வரும் கோடை காலம் முடிந்து மழைக்காலம் துவங்கும் வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என நம்பியிருந்த நிலையில் இந்த  ஆகாய தாமரை பரவலால் அனைத் தும் வீணாகிவிடும் என அச்சம் தெரி விக்கும் விவசாயிகள், உடனடியாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து வளர்ந்து வரும் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும், இவை மீண்டும் பரவாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

;