விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் ஆர்.பி.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நா.புகேந்தியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முடிவு செய்தனர். கூட்டத்தில் ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர் விஷ்ணுபிரசாத், செஞ்சி சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.