விழுப்புரம்.அக்.10- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத் திற்குட்பட்ட மூங்கில் பட்டு, உலகலாம்பூண்டி, பொன்னங்குப்பம், முண்டி யம் பாக்கம் உள்ளிட்ட கிரா மங்களை சேர்ந்த மாற்றுத்திற னாளிகளுக்கு அரசாணை படி நூறு நாள் வேலை வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை வழங்கும் வரை கார்த்திக்கும் போராட்டத்தை விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு துவக்கினர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கி பேசுகையில்,“ விக்கிர வாண்டி ஒன்றியத்தில் உலக லாம்பூண்டி, முண்டியம் பாக்கம், பொன்னங்குப்பம், மூங்கில்பட்டு உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கடந்த பல நாட்களாக நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கவில்லை. அர சாணை 52-ன்படி மாற்றுத்திற னாளிகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். முழுமையாக கூலி வழங்க வேண்டும், நூறு நாள் வேலை திட்ட அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும்” என்றார். பின்னர் வட்டார வளர்ச்சி உதவிஅலுவலர் தலைமையில் சங்க நிர்வாகி களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் முண்டியம்பாக்கம் தவிர்த்து மற்ற மூன்று ஊராட்சி யில் உடனடியாக வெள்ளிக் கிழமை முதல் வேலை வழங்குவதாக உறுதி அளித் தார். அதனை ஏற்று மாற்றுத் திறனாளிகள் காத்திருக்கும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.