சென்னை, மே 22- திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து வி.பி. துரைசாமி பாஜகவில் கரைந்தார். திமுக துணைப் பொதுச் செயலாள ராக பதவி வகித்துவந்த வி.பி. துரை சாமியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அப் பதவியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளி யிட்டார். அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு அந்தியூர் செல்வராஜ் எம்.பி. நியமிக்கப்பட்டதில் அறிவித்திருந்தார். இந்நிலையில், வி.பி. துரைசாமி வெள்ளியன்று (மே 22) சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு சென்றார். வாழ்க மாநிலத் தலைவர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
68 வயதாகும் வி.பி. துரைசாமி அருந்ததி இனத்தை சார்ந்தவர் ஆவார். 1996 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது திமுகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினரா னார். பிறகு திமுக சார்பில் தமிழக சட்டப்பேரவையின் துணை தலைவ ராகவும் பணியாற்றிவர்.