tamilnadu

img

மாற்று அறுவை சிகிச்சை : புனேவிலிருந்து சென்னைக்கு அதிவேகமாக கொண்டுவரப்பட்ட இதயம்

ஞாயிற்றுக்கிழமை 37 வயதான ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காக புனேவிலிருந்து சென்னைக்கு  இதயம் அதிவேகமாக கொண்டுவரப்பட்டது.

புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மூளை சாவு ஏற்ப்பட்ட  39 வயது பெண்ணின் இதயம் விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது இதன் உதவியால் இதயம் விரைவாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு அது வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதய மாற்று சிகிச்சை நிபுணர்கள்  இரவு 9 மணிக்குள் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று டாக்டர் ராவ் கூறினார். நோயாளி நன்றாக குணமடைந்து கொண்டிருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.