மோடி அரசு , ஒவ்வொருமுறையும் ஒரு பிரச்ச னையை திசை திருப்ப, மக்களுக்கு புதிய பிரச்சனையை உருவாக்குவதையே ஒரு தொழிலாக வைத்துள்ளது. அப்படி பத்து வருடங்க ளுக்கு மேலாக வரி வசூல் செய்யும் டோல்கேட்டு களை மூட வேண்டும் என கோரிக்கை நாடு முழுவ தும் வலுப்பெறவே, டோல்கேட் – பாஸ்டேக் முறையை கட்டாயமாக்கி, இனி யாரும் டோல்கேட்டு களை மூட வேண்டும் என பேசமுடியாதபடி செய்து விட்டது.
டோல்கேட் – பாஸ்டேக் முறையினால் கால தாமதம் மிச்சமாகும் என அரசு கூறினாலும், அத னால் ஏற்படும் பண மோசடிகளைப் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. உதாரணத்திற்கு ஒருவர் சென்னையிலிருந்து கடலூர் அல்லது வேலூர் செல்ல வேண்டுமானால் மூன்று அல்லது நான்கு டோல்கேட்டுகளை கடக்க வேண்டும். கார் மூலம் ஒரு டோல்கேட்டை கடக்க ஒரு முறைக்கு அறுபது ரூபாய். அதுவே நீங்கள் சென்று வர வாங்கினால் (இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு) 85 அல்லது 90 ரூபாய்க்கு வாங்க வேண்டும். அதாவது இரண்டா வது கட்டணத்தில் ஒவ்வொருமுறையும் ஐம்பது சதவிகிதம் மிச்சம். இதையே பாஸ்டேக் முறையை பயன்படுத்தும் போது நாம் ரூபாய் 120 செலுத்த வேண்டும். ஒவ்வொரு டோல்கேட்டிலும் இப்படி அதிகப்படி யான ரூபாயை நாம் செலுத்த வேண்டும். பெரும்பா லான வாகனங்கள் 24 மணிநேரத்தில் திரும்பி விடுகின்றன. அப்படிப்பட்ட வாகனங்களுக்கு டோல் கேட் – பாஸ்டேக் முறையினால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. காரணம் டோல்கேட் – பாஸ்டேக் முறையில் ஒருவர் டபுள் எடுக்க முடியாது.
பாஸ்டேக் முறை அமல்படுத்தும்போதே, அதற்கான செக்யூரிட்டி டெபாசிட் என ரூபாய் 200 எனவும் , அதன் ஸ்டிக்கருக்காக ரூபாய் 100 முதல் 150 வரை ஒவ்வொரு நிறுவனமும் அதன் வசதிக் கேற்ப வசூல் வேட்டை செய்கின்றன. இந்நிலையில், 24 மணிநேரத்தில் திரும்பி விடு கின்ற வாகனங்களுக்கு, திரும்பும்போது இது வரை இருந்தது போல், டோல்கேட் கட்டணத்தில் 50 விழுக்காடு, தன்னிச்சையாக பாஸ்டேக் முறையி னால் வாங்கினால் மட்டுமே அது சரியான முறை யாக இருக்கும். இந்தியாவில் 30 கோடி வாகனங்களுக்கு மேல் உள்ளன. இவை இல்லாமல் கனரக வாகனங்களின் எண்ணிக்கையையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும். இவற்றினால் வரும் முன் பணம் தவிர, 24 மணிநேரத்தில் திரும்பி விடும் பெரும்பாலான வாகனங்களுக்கு இரண்டாவது முறை வாங்கப்படும் 50 விழுக்காடு அதிக கட்ட ணம் என்பது, பாஸ்டேக் முறையை பயன்படுத்தி பொது மக்களை சுரண்டும், மோடி அரசின் ஒரு புது யுக்தியாகவே மாறியுள்ளது.
- கோவி. சேகர்