tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு

மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை, நவ. 30- உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் சென்னை  கொளத்தூரில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: உண்மையைத் திரும்பச் திரும்ப சொன்னால், அது உண்மை என ஏற்றுக் கொள்ள லாம், ஆனால் பொய்யைத் திரும்பச் திரும்ப சொல்லி வரு கிறார் எடப்பாடி பழனிசாமி, அவர்தான் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுதான் உண்மை நிலவரம்.

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு எடப்பாடி பழனி சாமி தலைமையிலான ஆட்சி பல்வேறு திட்டங்களைப் போட்டு  வருகிறது. அதற்காகப் பலரை  மறைமுகமாக வழக்கு மன்றத்  திற்கு அனுப்பிக் கொண்டிருக்கி றார்கள். 3 வருடமாக இந்த பிரச்  சனை நடந்து கொண்டிருக்கிறது.  தி.மு.க சார்பில் கடந்த 3 வருடங்க ளாக ஆலந்தூர் பாரதி அவர்கள்  நீதிமன்றத்திற்குச் சென்று தேர்தலை எந்த காரணத்தைக் கொண்டும் நிறுத்தக்கூடாது. நடத்தியே தீரவேண்டும். ஆனால் தேர்தல் நடத்துவதற்கு முன்னர் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துகள், இட ஒதுக்கீடு எஸ்.சி,  எஸ்.டி. அவர்களுக்கான இட ஒதுக்கீடு இவற்றையெல்லாம் முறைப்படுத்தி நடத்த வேண்டும் எனச் சொல்லி இருக்கிறோம். அந்த அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் இதெல்லாம் முறைப்படுத்தி நடத்துங்கள் என்று சொல்லி இருக்கிறதே தவிர தி.மு.க தேர்தலை நிறுத்தியதாகச் சொல்லவில்லை. நான் மக்கள்  மன்றத்தில் மட்டும் இல்லை. சட்ட மன்றத்திலும் பதிவு செய்துள் ளேன். ஆனால் தொடர்ந்து உங்  களைப் போன்ற ஊடகங்கள் பத்திரிகையில் செய்தி போடும்  போது தி.மு.க. தான் நீதிமன்றத் திற்குச் சென்று தடை போட்டுத் தேர்தலை நிறுத்திவிட்டதாகத் தவறான தகவலைப் பரப்பி வருகிறீர்கள்.

இதுகுறித்து தெளிவாகக் கூறிய பின்னரும் ஒரு பத்திரிகை யில், தி.மு.க தான் தேர்தலை நிறுத்த நீதிமன்றம் சென்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி பேசி யதாகத் தலைப்புச் செய்தி இடம்பெற்றுள்ளது. ஆனால் என்னுடைய செய்தி வரவில்லை.  எனவே மீண்டும் கூறுகிறேன் நேற்று 3 விஷயங்களை முன் வைத்தேன்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்  படி வார்டு வரையறையை முறைப்  படுத்த வேண்டும். அதற்கடுத்து புதிதாக மாவட்டங்கள் உரு வாக்கப்பட்டதை வரவேற்கி றேன். ஆனால் அந்த புதிய மாவட்டங்களில் வார்டு வரை யறை பணிகளை மேற்கொள்ள வில்லை.அடுத்தது பேரூ ராட்சி, நகராட்சி மற்றும் மாநக ராட்சியின் பட்டியலின, பழங்குடி யின பெயர்கள் ஒதுக்கீடு செய்  யப்படவில்லை.இவற்றை யெல்லாம் முறைப்படுத்தி அரசு முறையாகத் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளார்களா என்பது என்னுடைய கேள்வி. இதுகுறித்து முதலமைச்சர் சொல்ல வேண்டாம். ஆனால்,  தேர்தல் நடத்தும் ஆணையத்தி டமே தி.மு.க சார்பில் ஆர்.எஸ். பாரதி சென்று அடிக்கடி சென்று  வார்டு வரையறையை முறைப்  படுத்துங்கள் எனக் கோரிக்கை  விடுத்துள்ளோம். அவர்களிட மிருந்தும் எந்தவிதமான பதி லும் கிடைக்கவில்லை.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர்  அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது மாநில தேர்தல் ஆணையம். அந்த கூட்டத்தில் தி.மு.க சார்பில் மூத்த வழக்கறி ஞர் என்.ஆர். இளங்கோ, வழக்  கறிஞர் செயலாளர் கிரிராஜன் ஆகியோர் நேரிடையாக சென்று  மீண்டும் நினைவு படுத்தி உள்ளார்கள். இதுவரைக்கும் பதில் இல்லை. ஆகவே இதெல்லாம் முதலமைச்சர் சொல்கிறாரா? ஆட்சி சொல்கி றதா? அரசு சொல்கிறதா என்ற கவலை இல்லை. தேர்தல் ஆணையமாவது இதை வெளிப்படுத்தவேண்டும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வெளிப்படைத் தன்மையோடு இல்லை. பல முறை கோரிக்கை வைத்து  எந்த பதிலும் இல்லை. அத னால்தான் நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. நீதிமன்றம் மூலமாக நியாயத்தை நிலை நாட்டவேண்டும். தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் நீதி மன்றம் செல்லவில்லை. ஒரு வேளை சட்டத்தை மீறி விதி களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் நடத்தும் சூழல் வந்தால் கூட அதைச் சந்திப்பதற்கு தி.மு.க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.

;