tamilnadu

img

சொத்துக்கள் பறிமுதல் விவகாரம்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு

சென்னை, டிச. 30- ஜி.எஸ்.டி ரிட்டன் தாக்கல் செய்யாவிடில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற அறி விப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமலாக்கம் செய்யப் பட்டு 2 ஆண்டுகள் கடந்துவிட்டன. 98 முறைக்கு மேல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. வணிக விரோத  சட்ட திட்டங்கள் நிச்சயம் மாற்ற வேண்டும் என்பது தான் பேரமைப்பின் கோரிக்கை. ஆனால் மாற்றம்  செய்யப்படும்போது வணிகர்களுக்கு அதற்குரிய முறையை விழிப்புணர்வு மூலம் ஏற்படுத்த வேண்டும். அதற்குரிய கால அவகாசம் வேண்டும்.  ஆன்லைனில் மட்டுமே கணக்குகள் தாக்கல்  செய்யவேண்டும் என்பதில் எத்தனை குளறுபடிகள். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பதிவுகள் ஏற்றும்  போது ஏற்படும் தடைகள் எத்தனை? இதில் குறிப்  பிட்ட கால வரம்புக்குள் ரிட்டன் தாக்கல் செய்யப்பட வில்லை என்றால் சட்டப் பிரிவு 62-ன் கீழ் ‘பெஸ்ட் ஆப்  ஜட்ஜ்மெண்ட்’, சட்டப்பிரிவு 78, 79இன் கீழ் சொத்து பறிமுதல், கையகப்படுத்துதல் என்பது ஏதோ கடத்தல்காரர்களை மிரட்டும் தோரணையில்தான் அரசின் செயல்பாடுகள் இருக்கிறது.

ஜி.எஸ்.டி சட்ட விதிகள் மாற்றங்கள் முடிவுக்கு வரவேண்டும். ஆன்லைன் குளறுபடிகள் தவிர்க்க வேண்டும். பிராந்திய மொழிகளில் சட்டவிதிகள், நடைமுறைகள் தெளிவுப்படுத்தப்பட்டு வணிகர்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வணிக வரி ரிட்டன்களை எளிமைப்படுத்துவற்கான வழி முறைகளை துரிதப்படுத்த வேண்டும். இதற்கு தேவைப்படும் காலத்திற்கேற்ப வணிகர்களுக்கு மேலும் அவகாசம் அளித்து வரி வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, பொரு ளாதார சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பணப்  புழக்கம் குறைவு இவையனைத்தாலும் வணிகம்  பெருமளவு பாதிக்கப்பட்டு, வணிகச் சரிவு இம யத்திலிருந்து இடுகாட்டை நோக்கி பயணித்துக் கொண்டுள்ள மிகவும் சோதனையான கால கட்டத்தில், ஜி.எஸ்.டி வரி ரிட்டன் தாக்கல் செய்யா மல் தாமதித்தால் சொத்துக்கள் பறிமுதல் என்ற  சட்டதிருத்தம் தேவையற்றது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறது.   அரசு ஜி.எஸ்.டி வரி சம்பந்தமாக,  வணிகர்க ளுக்கு விரோதமான முடிவுகளை எடுக்குமானால், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புது தில்லியில் ஜனவரி 6, 7, 8 ஆகிய தேதிகளில் அகில இந்திய வணிகர் சம்மேளனத்துடன் இணைந்து நடத்தும் ஆன்லைன் வர்த்தக எதிர்ப்பு மாநாட்டில் உரிய போராட்டங்கள் குறித்து அறிவிக்கும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

;