முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக யூடியூப் மாரிதாஸ் மீது உதயநிதி வழக்கு தொடுத்துள்ளார்.
மறைந்த திமுக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக யூடியூப் விமர்சகர் மாரிதாஸ் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார். திமுக சார்பாக தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சட்ட போராட்டத்தில் இறங்கி உள்ளார். சமூக வலைத்தளங்களில், சேனல்களில் திமுக குறித்தும் தன்னை குறித்தும் அவதூறாக செய்தி வெளியிடும் நபர்கள் மீது போலீசில் புகார் அளித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக தொடர்பாக பல்வேறு வீடியோக்களை மாரிதாஸ் வெளியிட்டு இருக்கிறார். பாகிஸ்தானுக்கும் திமுகவிற்கு தொடர்பு உள்ளது என்றும் கூட இவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்களை குறிப்பிட்டு உதயநிதி வழக்கு தொடுத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்துள்ளார் .