tamilnadu

img

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து 11-ஆவது நாளாக போராட்டம்

தொடரும் காவல்துறையின் வழக்குப்பதிவு

கும்பகோணம், மார்ச் 2-   கும்பகோணம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத் கூட்ட மைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குடி யுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் கடந்த பிப். 21 ஆம் தேதி முதல் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் போராட்டம் திங்க ளன்று பதினோராவது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்த போதும் தொடர்ந்து குடும்பங்களோடு போராட்டத்தில் ஈடுப்டடனர்.  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ் விடுதலை சிறுத்தை நாம் தமிழர் மற்றும் தமிழ் அமைப்புகள் நிர்வா கிகள் மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

திங்களன்று நடைபெற்ற பதினோ ராவது நாள் போராட்டத்தில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாதர் சங்க அகில இந்திய பொதுச் செய லாளர் சுகந்தி குடியுரிமைச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன உரை யாற்றினார். மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, தலைவர் கலைச்செல்வி மாவட்ட குழு உறுப்பினர் அறிவு ராணி கும்ப கோணம் நகர தலைவர் சுமதி நகர குழு உறுப்பினர் ஜோதி உட்பட ஏராளமான மாதர் சங்க பொறுப்பாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டன முழக்கங்க ளை எழுப்பினர்.  மேலும் பாபநாசம் அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெறும் போராட்டத்திற்கு சென்று தங்களது ஆதரவு களை தெரிவித்து மத்திய அரசுக்கு எதிரான கண்டனக் குரல்களை  எழுப்பினர்.

வழக்குப் பதிவு              

பாபநாசம் அண்ணா சிலை அருகில் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இப்போராட்டம் அனுமதியின்றி நடந்த தாக கூறி பாபநாசம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணைச் செயலாளர் முகமதுநுக்மான், திருப்பாலத்துறை கிளைத் தலைவர் நூருன்பசீர், மாவட்ட மாணவரணி செயலாளர் அப்துல் ரகு மான், இராஜகிரி கிளை தலைவர் அப்பாஷ் என்ற சாஜஹான், பண்டார வாடை கிளை தலைவர் இக்பால் ஆகிய 5 நபர்கள் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

சீர்காழி

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில்  புத்தூர், அரசூர், எருக்கூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.               (ந.நி)

 

;