சென்னை,மார்ச் 6- தமிழகத்தில் மாநிலங்க ளவை உறுப்பினர் தேர்த லுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளியன்று (மார்ச் 6) தொடங்கியது. தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்க ளின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடி வடைவதால் புதிய உறுப்பி னர்களை தேர்ந்தெடுப்பதற் காக இத்தேர்தல் நடக்கிறது. மார்ச் 6ஆம் தொடங்கி 13 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். ஒரு வேட்பாளரை 10 எம்.எல்.ஏ.க்கள் முன் மொழிய வேண்டும். வேட்பு மனுக்கள் பரிசீலனை வரு கிற 16ஆம் தேதி நடை பெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற 18ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் மன்னன் சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகரை சேர்ந்த 61 வயதாகும் கு.பத்மநாபன் முதல் நாளில் முதல் நபராக மனு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து தரும புரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி நாகமரை கிராமத்தை சேர்ந்த 39 வய தாகும் ந.அக்னி ஸ்ரீராமச் சந்திரன் மனு செய்தார். இந்த இருவரும் சுயேட்சை களாகும். போட்டிக்களத்தில் 6 வேட்பாளர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே 26ஆம் தேதி தலைமைச் செயல கத்தில் உள்ள சட்டமன்ற குழுக்கள் அறையில் வாக்குப் பதிவு நடத்தப் படும். திமுக சார்பில் இந்த தேர்தலில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இன்னமும் வேட்பாளர் பட்டியல் அறி விக்கப்படவில்லை.