tamilnadu

img

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள், வைகோ மனுதாக்கல்

சென்னை, ஜூலை 6- மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மதிமுக பொதுச் செய லாளர்  வைகோ வேட்பு மனு தாக்கல்  செய்தார். திமுக சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்களான தொ.மு.ச. சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகி யோரும் வேட்புமனுக்களை தாக்கல்  செய்தனர். மாநிலங்களவையின் 6 இடங்க ளுக்கு தமிழகத்தில் இருந்து புதிய  உறுப்பினர்களை தேர்வு செய்ய  வரும் 18ஆம் தேதி தேர்தல் நடை பெற உள்ளது. அதிமுக மற்றும் திமுக வுக்கு சட்டப்பேரவையில் உள்ள  உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், இரு கட்சிகளும் தலா 3 பேரை அனுப்ப முடியும். இந்நிலையில், திமுக சார்பில் தொமுச பொதுச்செயலாளர் சண்முக மும், வழக்கறிஞர் வில்சனும் வேட்பா ளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஏற்கெனவே செய்யப்பட்ட உடன்பாட்டின்படி, மதிமுகவுக்கு ஒரு  இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத் தில் வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில், இந்த 3 பேரும் மாநி லங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்த னர். தேர்தல் நடத்தும் அதிகாரி யான, சட்டப்பேரவை செயலாளர் சீனி வாசனிடம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மூவரும்  வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொருளாளர் துரைமுரு கன், முன்னாள் அமைச்சர்கள் க. பொன்முடி, எ.வ.வேலு, மாநிலங்க ளவை உறுப்பினர் ஆலந்தூர்பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமது வேட்புமனு ஏற்கப்ப டுமா என்பதற்கு, வேட்புமனு பரி சீலனையின்போது விடை கிடைக் கும் என்றார்.

அதிமுக வேட்பாளர்கள் 

இதனிடையே அதிமுகவில் எடப்  பாடி, ஓ.பி.எஸ் கோஷ்டிகளுக்கு இடையே கடும் மோதலால் வேட்பா ளர் தேர்வில் இழுபறி நீடித்துவந்த நிலையில் சனிக்கிழமையன்று இரு வேட்பாளர்கள் பெயர்கள் அறி விக்கப்பட்டன.

மாநிலங்களவை
அதிமுக சிறுபான்மையினர் நலப்  பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முகமது ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திர சேகரன்  ஆகியோர் பெயரை அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்  செல்வம், இணை ஒருங்கிணைப்பா ளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். சமீபத்தில் நடைபெற்ற நாடாளு மன்ற மக்களவை பொதுத் தேர்த லின் போது, ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பா.ம.க. வுக்கு மற்றுமுள்ள ஒரு இடம் ஒதுக்  கப்படுகிறது என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த இடத்தில் பாமக சார்பில் அன்புமணி போட்டி யிட உள்ளார். அதிமுக, பாமக வேட்பாளர்கள் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்ய  உள்ளனர். அன்றுதான் மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும், ஜூலை 9ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற 11ஆம் தேதி கடைசி நாளா கும். இவர்களை தவிர யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.
 

;