சென்னை, மே 23- தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதா வது:
மேற்கு திசை தரைக் காற்று தொட ர்ந்து வீசக்கூடிய நிலையில் தமிழ கத்தின் வடமாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை அளவு 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் பதி வாகக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ கம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்க ளில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீல கிரி மாவட்டத்தில் ஏழு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமி ழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை யை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.