tamilnadu

img

ரயில்வே தனியார்மயம் கூடாது: தொல். திருமாவளவன் பேட்டி

உளுந்தூர்பேட்டை, செப். 29-  ரயில்வே துறை தனி யார்மயமாக்கப்படுவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்ப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கூறினார். உளுந்தூர்பேட்டையில் ஞாயிறன்று (செப். 29) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது;- விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் முறையே திமுக, காங்கிரஸ் வேட்பா ளர்களை விடுதலை சிறுத்தை கள் கட்சி ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும்.  தமிழகத்தில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழிப் பாடங்களை ரத்து செய்திருப்பதாக தேர்வாணையம் அறிவித்தி ருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இது தமிழர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதற்கும், எதிர்கால வாழ்வாதாரத்தை யும், வாய்ப்புகளையும் நாசப்படுத்த கொண்டு வரப்படும் திட்டமாகும். இதனை ரத்து செய்து வழக்கம்போல தேர்வுகளை நடத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நீண்ட காலமாக நடத்தாமல் தற்போது மழைக் காலத்தில் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள். இதுவாவது நடக்குமா என்பது சந்தேகமே. வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவார்களா என்பதே சந்தேகம். 

ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைத்து ரயில்களை இயக்க முயற்சிப்பது சமூகநீதிக்கு எதிரானது. இது இட ஒதுக்கீட்டை நாசப்படுத்தும் ஒரு திட்டமாகும். எனவே ரயில்வேயை தொடர்ந்து அரசே நடத்த வேண்டும்.  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 ஆவது பிரிவை நீக்குவதை மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் ஆதரித்ததாக விழுப்புர த்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியிருப்பது பொய் பிரச்சாரமாகும். ஜம்மு-காஷ்மீர் என்ற ஒரு மாநிலத்தையே தற்போது இல்லாமல் செய்துள்ளனர். இது அம்மக்களுக்கு பாஜக அரசு செய்துள்ள நம்பிக்கை துரோகமாகும். காஷ்மீர் மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப அவர்களின் நலன்களை ஒட்டி இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் அவர்களின் கருத்தாகும். அவரின் கருத்தை திரித்துக் கூறுவது அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக வினர் செய்யும் திட்டமிட்ட புரட்டு வேலையாகும். இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைத்திட க்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவ்விடங்களில் மேம்பால ங்கள் அமைத்திட வேண்டும். உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்து கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினர். விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார் உடனிருந்தார்.

;